×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் ஜோடி சித்து- ஸ்ரேயா வீட்டில் நடந்த சூப்பர் விசேஷம்! குவியும் வாழ்த்துக்கள்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

காதல் ஜோடி சித்து-ஸ்ரேயா வீட்டில் நடந்த சூப்பர் விசேஷம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

Advertisement

கடந்த ஆண்டு இறுதியில் சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த நட்சத்திரங்கள் பலருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட அழகிய ஜோடிகளில் ஒன்றுதான் சித்து- ஸ்ரேயா ஜோடி. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரங்களாக, கணவன் - மனைவியாக நடித்து வந்தனர்.

அப்பொழுது அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி என்ற தொடரில் முன்னணி ஹீரோயினாகவும், சித்து  விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் ராஜாராணி 2 தொடரில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் அண்மையில் ஸ்ரேயாவின் வீட்டில் சூப்பரான விசேஷம் நடைபெற்றுள்ளது. அதாவது  நடிகை ஸ்ரேயாவின் தங்கை பிரியங்காவிற்கு திருமணம் நடக்கவுள்ளது. அதற்கான திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொண்டாட்டத்தின் போது தனது தங்கையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஸ்ரேயா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shreyaa #sister #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story