ஷாக்கிங்... டி.இமான்-சிவகார்த்திகேயன் மோதல்.. பின்னணி இதுதானா.? வலைப்பேச்சு பிஸ்மி பதிவால் புதிய சர்ச்சை.!
ஷாக்கிங்... டி.இமான்-சிவகார்த்திகேயன் மோதல்.. பின்னணி இதுதானா.? வலைப்பேச்சு பிஸ்மி பதிவால் புதிய சர்ச்சை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் அயலான் என்ற திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவரது பல வெற்றி படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவ கார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி தமது சமூக வலைதள பக்கத்தில் "உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை" என்று சிவகார்த்திகேயனின் பெயரை குறிப்பிடாமல் பதிவு செய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் மான் மற்றும் அவரது மனைவியின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என சில செய்திகளும் தெரிவிக்கின்றன.