டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர் சமீப காலமாக ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப உறவுகள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் இந்த தொடர் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நிலா கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன.
அய்யனார் துணை குடும்பத்தில் நிலா திருமணமாகி வந்ததிலிருந்து அந்த வீட்டில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதாக காட்டப்பட்டு வந்தது. வீட்டில் இருந்த அனைவரும் நிலாவை குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்த்து வந்தனர். சோழனுடன் சேர்ந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக சேரன் கூட தனிப்பட்ட முறையில் நிலாவுக்கு பல அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து வழக்கின் இறுதி விசாரணைக்காக சோழனும், நிலாவும் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். அப்போது தங்களுக்கு திருமணம் செய்து வைத்த காவலரை சந்திக்கும் சோழன், நிலாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட விஷயத்தை குறித்து பேசுகிறார். இதை மறைந்து கேட்கும் நிலா கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்கிறார்.
இதன் பின்னர் நீதிபதியிடம் நேராக செல்லும் நிலா, தன்னுடைய விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார். இதை கேட்ட சோழன் பெரும் அதிர்ச்சியடைகிறார். தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டதாக காட்டப்படும் காட்சிகள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டிற்கு திரும்பிய பிறகு நடந்த விஷயத்தை சோழன் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதனால் அனைவரும் நிலா பக்கம் நின்று அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகின்றனர். தனது வாழ்க்கையில் நடந்த ஏமாற்றங்களை கதறி அழுதபடி கூறும் நிலா, இறுதியில் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இடம்பெற்று ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.