×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த பெரும் ஜாக்பாட்! எந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பார்த்தீர்களா!!

விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூ

Advertisement

விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் பாதியிலேயே தொடரை விட்டு விலகினார்.

பின்னர் ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். ஷிவானி எப்பொழுதும் சமூக வலைதளங்களிலும் இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அண்மையில் கூட  ஷிவானி தான் வாங்கிய பி.எம்.டபிள்யூ 7 காரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் ஷிவானி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani #heroine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story