×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம சிம்பிளாக, கையில் மாலையுடன் இருக்கும் ஷிவானி! ஏன்? என்ன விசேஷம் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

செம சிம்பிளாக, கையில் மாலையுடன் இருக்கும் ஷிவானி! ஏன்? என்ன விசேஷம் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் ஷிவானி.  இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

ஆனால் அவர் சில காரணங்களால் பாதியிலேயே அந்த தொடர்களில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷிவானி நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கோயிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து செம சிம்பிளாக அர்ச்சனை செய்து, கையில் மாலையுடன் இருக்குமாறு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவர் இணையத்தில் ஷேர் செய்த நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani #birthday #temple
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story