×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சோ.. எழக் கூட முடியாமல் அவதிப்பட்ட ஷிவாங்கி.! செல்லத்துக்கு என்னதான் ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!

அச்சோ.. எழக் கூட முடியாமல் அவதிப்பட்ட ஷிவாங்கி.! செல்லத்துக்கு என்னதான் ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ஷிவாங்கி.அவர் தனது மெல்லிய இனிமையான குரலால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் இவரது சிறுபிள்ளைத்தனமும், வெகுளித்தனமும் மக்களை கவர்ந்தது.

இந்த நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அதன் மூலம் அவர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அவர்களது உள்ளத்தில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவர் வெள்ளித்திரைக்கு தாவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் அவர் தான் எழ முடியாமல் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரு நாட்களாக நான் கடுமையான காய்ச்சல் மற்றும் சளி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு எழக் கூட முடியாமல் இருந்தேன். ஆனால் உங்களது அன்பு என்னை இப்போது எழ வைத்துள்ளது. எனக்கு உங்களது அன்புக்கு முன் நிகராக ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகளவில் பரவுவதால், அனைவரும் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள் எனவும் ஷிவாங்கி குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shivangi #fever #Cold
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story