×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வனிதா கூறிய ஒற்றை வார்த்தை! தாறுமாறாக வெளுத்து வாங்கிய ஷெரின்! வைரலாகும் வீடியோ!!

sherin fight with vanitha promo released

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் ஷெரின் தர்ஷனை காதலிப்பது போல வனிதா பேசி கடும் பிரச்சினையை கிளப்புகிறார்.இதனால் கடுப்பான  ஷெரின் என்னோட ரிலேஷன்ஷிப் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? என்னை பத்தி பேச உனக்கு என்ன உரிமை உள்ளது என மிகவும் கடுமையாக திட்டியுள்ளார். இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sherin #bigboss #vanitha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story