×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்தரங்கத்தை அம்பலபடுத்தும் சின்னதிரை பிரபலங்கள்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

அந்தரங்கத்தை அம்பலபடுத்தும் சின்னதிரை பிரபலங்கள்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

Advertisement

சின்னத்திரையில் ஒரு சில நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின் காதலித்து சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் இருக்கின்றனர். இதில் நீண்ட நாட்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு சிலரே. இதன் பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பலர் பிரிந்து விடுகின்றனர்.

ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக் கொண்டு ஒன்றாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறாக சமீபத்தில் ஒன்று சேர்ந்த ஜோடி அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இவர்கள் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் இணையதளத்தில் மோதிக்கொண்டனர். மேலும் இவர்கள் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இதேபோன்று சமீபத்தில் வைரலாக பரவும் மற்றொரு தம்பதியினர் தான் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இவர்களும் சீரியலின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதன் பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தற்போது இணையத்தில் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக இவர்கள் செய்வது நடிகர் நடிகைகளின் மேலிருக்கும் மதிப்பை குறைத்து வருவதால் நெட்டிசன்கள் இவர்களை கழுவி ஊத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#serial #actress #Kollywood #controversy #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story