திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய பரீனா...! அவருக்கு பதில் இனி நடிக்கப்போவது யார் தெரியுமா?
திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய பரீனா...! அவருக்கு பதில் இனி நடிக்கப்போவது யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக நடித்தவர் ஃபரீனா. மிரட்டலான வில்லியாக ஃபரீனாவின் எதார்த்தமான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஃபரீனா பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
பாரதி கண்ணம்மா தொடரை தொடர்ந்து பரீனா கலர்ஸ் தமிழில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற தொடரிலும் நடித்து வந்தார். அந்த தொடரில் பவானி கதாபாத்திரத்தில் நடித்துவந்த பரீனா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் பரீனாவிற்கு பதிலாக நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். அவர் இதற்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362