×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கமல்ஹாசனின் சங்கை அறுப்போம்.. கொலை மிரட்டல் விடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்.! ஏன்? என்ன நடந்தது??

சனாதனம் குறித்து பேசினால் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடத்திவரும் அகரம் ஃபவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், கமல்ஹாசன், கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அப்பொழுது பேசிய நடிகர் கமல்ஹாசன், 'சனாதான சங்கிலிகளை அடித்து நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்விதான்' என கூறியுள்ளார்.

 சனாதானம் குறித்த கமலின் பேச்சு 

இவரது பேச்சுக்கு தமிழகத்தில் பெரும்பாலானோர் வரவேற்பு கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சனாதனம் பற்றிய இவரது பேச்சு சனாதனவாதிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் நடிகர் ரவிச்சந்திரன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

இதையும் படிங்க: தொடரும் விவாகரத்து பஞ்சாயத்து.! மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகாரளித்த ஜெயம் ரவி!!

 கமல்ஹாசனின் சங்கை அறுப்போம்...

அப்பொழுது பேசிய அவர், சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்' என கொலை மிரட்டல் விடுவது போன்று பேசியுள்ளார். கொலை மிரட்டல் விடுத்து அவர் பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மௌரியா மற்றும் 30க்கும் மேற்பட்ட கட்சினர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடரும் விவாகரத்து பஞ்சாயத்து.! மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகாரளித்த ஜெயம் ரவி!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamalhasan #Ravi Chandran #SanaDhanam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story