கத்தரி பூவழகி கரையா பொட்டழகி...பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் பாவாடை தாவணி புகைப்படம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் பாவாடை தாவணி புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அ
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் பாவாடை தாவணி புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் பெற்றுவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். குடும்பக் கதையை மையமாகக் கொண்டு, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த தொடர் TRP யிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டஸ் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.
சித்ரா அளவிற்கு காவியா பெயர் வாங்குவாரா என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறைந்த சித்ராவின் இடத்தை மிக சிறப்பாக நிரப்பியுள்ளார் காவியா. காவியாவுக்கு பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னதான் சீரியல், விளம்பரம் என பிசியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார் காவியா.
பாவாடை தாவணியில் கிராமத்து பெண் லுக்கில் உள்ள புகைப்படங்களைகாவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தநிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.