×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல இளம் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.!

பிரபல இளம் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.!

Advertisement

பிரபல இளம் சீரியல் நடிகர் பவன் சிங் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகர் பவன் சிங் (25). இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர். 

தற்போது இவர் ஹிந்தி சீரியலில் நடித்து வருவதால், மும்பையில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது இவரது உடல் அவரது சொந்த ஊரான மாண்டியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் திரை பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bawan Singh #serial actor #maharashtra #karnataka #Mandiya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story