சர்க்கார் படத்திலிருந்து நீக்கப்படும் காட்சிகள் என்னென்ன! லேட்டஸ்ட் அப்டேட்
scenes removed from the sarkar movie
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் என ஆளும் அதிமுக கட்சியின் சார்பில் பலரு எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு திரையங்குகளின் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன. மற்றும் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே எதிர்ப்பு வலுப்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சர்ச்சை காட்சிகள் நீக்கப்படலாம் என்றும், இதற்காக மீண்டும் தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தால், அந்த படத்தை மறுதணிக்கை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று தணிக்கை குழு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சர்கார் படத்தில் வரும் கோமளவல்லி என்ற பெயரை உச்சரிக்கும் இடங்களிலும் மியூட் செய்யப்படுவதாகவும், இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் நீக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு தணிக்கை குளித்த அனுமதி பெற்று நாளை முதல் ‘சர்கார்’ புதுப்பொலிவுடன் திரையிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த காட்சிகளை நீக்க விஜய், மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்யாமல் தயாரிப்பு தரப்பே முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது அதிமுகவினர் சமாதானம் அடைந்து படத்தை திரையிட ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.