தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லுக்கே வெறித்தனமா இருக்கே.. சன் டிவியில் மிரட்டலான வில்லியாக தெறிக்கவிடும் மன்மதராசா நாயகி! எந்த சீரியலில் தெரியுமா??

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூல

sayasingh going to act in poove unakaga serial as negative role Advertisement

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாயாசிங். இப்படத்தில் இவர் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய மன்மதராசா பாடலுக்கு போட்ட குத்தாட்டத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து சாயாசிங் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக, பிரகாஷ் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமான கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் சாயாசிங் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் தனது கணவருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சாயாசிங் தற்போது சன் டிவியில் பிரபல தொடரில் களமிறங்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பூவே உனக்காக தொடரில் பயங்கரமான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.sayasingh

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sayasingh #serial #poove unakaga
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story