எங்க வீட்டு மாப்பிளை சீசன் 2 விற்கு தயாராகும் பிரபல நடிகர்! கிண்டல் செய்து சதீஷ் போட்ட ட்வீட்.!
sathish tease aarya by viral video

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் படலமாக இந்த நிகழ்ச்சி அமைத்தது.
பல பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பல தேர்வுகளை கடந்து, இறுதிகட்டத்திற்கு வந்த 3 பெண்களில், யாரையாவது ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்னால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது பின்பு அறிவிக்கிறேன் என்று கூறி பார்வையாளருக்கு அவர் பெரும் அதிர்ச்சியை அளித்தார்.
இந்நிலையில் தற்போது ஆர்யா உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதற்கு நடிகர் சதீஷ், இல்லையே, பார்த்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை 2வது சீசனிற்கு தயாராவது போல் உள்ளதே என கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.