சத்தமின்றி முத்தம் தா படத்தின் 'செம்பரம்பாக்கம்' பாடல் வெளியானது; ஆண்ட்ரியாவின் குரலில் அசத்தல் பாடல்.!
சத்தமின்றி முத்தம் தா படத்தின் 'செம்பரம்பாக்கம்' பாடல் வெளியானது; ஆண்ட்ரியாவின் குரலில் அசத்தல் பாடல்.!
நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சத்தமின்றி முத்தம் தா.
இப்படத்தை ராஜ்தேவ் இயக்கியுள்ளார், ஜூபின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவையும், மதன் ஜி எடிட்டிங் பணிகளையும் கையாண்டுள்ளனர்.
இப்படம் 2024ல் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகளை படக்குழு விறுவிறுப்புடன் மேற்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் செம்பரம்பாக்கம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவேகாவின் வரிகளில், ஆண்ட்ரியாவின் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் வைரலாகி வருகிறது.