×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் மற்றும் இசை வெளியீடு தேதி அறிவிப்பு..!

sarkar-single-track-release-date

Advertisement

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து எடுக்கும் படம் தான் சர்க்கார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெருங்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற காந்தி ஜெயந்தி அக்., 2 ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துகொண்டு இருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கி வருகின்றனர். மேலும் காட்சிகள் அனைத்தும் நல்ல முறையில் வந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ஒன்று வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.  சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடை வெளியிட்டு விழா வரும் அக் மாதம் 2 ஆம் தேதி நடக்க உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story