3 நாள், அடித்து நொறுக்கிய இந்திய பாக்ஸ் ஆபீஸ்! சர்கார் வேற லெவல்!
Sarkar movie collection up to date

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. படம் முழுவதும் அரசியல் என்பது படத்தின் இசைவெளியீட்டு விலாவிலையே உறுதியாகியது. மேலும் படத்தின் டீசர் அதை மேலும் உறுதி செய்தது.
இந்நிலையில் தீபாவளிக்கு படம் வெளியான நிலையில் படத்தில் தேவை இல்லாத சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக போராட்டம் வெடித்தது. என்னதான் படத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் ஒருபக்கம் வசூல் ரீதியாக படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் 100 கோடியை தாண்டிய ஆறாவது படமாக பாக்ஸ் ஆபிசில் இடம்பிடித்துள்ளது சர்க்கார் திரைப்படம். படம் வெளியாகி மூன்று நாட்களில் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் தமிழகத்தில் மட்டுமே சர்கார் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.