×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளையதளபதி அகில உலக தளபதியாக மாற கலாநிதி மாறன் கூறும் அறிவுரை!!

sarkar audio launch thamparam

Advertisement

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் விஜய் அகில உலக தளபதியாக வருவதற்கு ரஜினிகாந்தை போன்று இனிமேல் 3 டி படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இணையும் மூன்றாவது படம் சர்க்கார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் விஜய் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருந்தன. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீபாவளி அன்று வெளியாக உள்ள இப்படத்தின் சிம்டங்கரான், ஒரு விரல் புரட்சி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மிக பிரமாண்டமாக நடந்தது. இதில், கல்லூரி மாணவர்கள், ஏராளமான ரசிகர்கள், என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினர், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் கலாந்திமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், என்று திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 

மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய் தான். எனவே அகில உலக தளபதியாக மாறுவதற்கு இனிமேல் ரஜினிகாந்தை போன்று 3டி படங்களில் அடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது அவருடைய நேர்மை, எளிமை, உழைப்பு, தன்னடக்கம்  ஆகியவை அனைவரும் அறிந்ததே என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #sarkar audio launch #tamil movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story