×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை முந்திய கார்த்தியின் சர்தார்.! அதுவும் எதில் தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை முந்திய கார்த்தியின் சர்தார்.! அதுவும் எதில் தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் டான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இதில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் தமிழக இளைஞனுக்கும், பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இடையேயான காதல் கதையை மையமாக கொண்டது. 

அதனைப்போலவே தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி, மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படம் இரண்டும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘சர்தார்’ படம் 2 மணி நேரம் 44 நிமிடமும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் 2 மணி நேரம் 11 நிமிடமும் ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் படத்தை விட சர்தார் படம் ரன்னிங் டைமில் அதிகமாக உள்ளது.

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prince #Deepavali #sardar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story