×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுத்த அபத்தம்! எப்படி இதுமாதிரியெல்லாம் சொல்லமுடியுது! தீயாய் பரவியவதந்தி! வேதனையுடன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட வீடியோ!

Saran explain about MGM hospital and bill payment

Advertisement

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்  அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்,  எம்ஜிஎம் மருத்துவமனை மற்றும் கட்டணம் செலுத்துவது குறித்தும் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தது. அதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கமளித்து எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அதில் அவர் கூறியதாவது, மருத்துவமனை குறித்தும், மருத்துவ கட்டணம் வசூலிப்பது குறித்து வதந்திகள் பரவி வருகிறது. மேலும் மருத்துவமனையில் எங்களால் கட்டணம் செலுத்தமுடியாமல் பாக்கி இருந்ததாகவும், அதற்கு நாங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து அவர்கள் மறுத்துவிட்டதாகவும், பின்னர் குடியரசுத் துணைத் தலைவரிடம் கேட்டநிலையில் அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு கட்டணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நாங்கள் பாக்கி பணத்தை தரும்வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் சுத்த அபத்தம்

இவை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களை எவ்வளவு பாதிக்கும், காயப்படுத்தும் என்பதுகூட புரியாமல் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்.
நானும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து சிகிச்சைக் குறித்தும், கட்டணம் குறித்தும் விரைவில் அறிக்கை வெளியிடுவோம். எம்.ஜி.எம் மருத்துவமனை எனது அப்பாவுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை அளித்தார்கள். எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நானும் என் குடும்பமும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spb charan #MGM hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story