×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாண்டி வீட்டில் நடந்த விசேஷம்.! அட.. லாலா பாப்பா வளர்ந்து வேற மாதிரி ஆகிட்டாரே.! வைரல் புகைப்படங்கள்!!

சாண்டி வீட்டில் நடந்த விசேஷம்.! அட.. லாலா பாப்பா வளர்ந்து வேற மாதிரி ஆகிட்டாரே.! வைரல் புகைப்படங்கள்!!

Advertisement

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையால் அனைவரையும் கவர்ந்து பிரபலமானவர் சாண்டி. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.

மேலும் தற்போது சாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சில நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சாண்டி  மூன்று முப்பத்தி மூன்று என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

சாண்டி சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சாண்டி மற்றும் சில்வியா அண்மையில் தங்களது 5வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர். அதனை முன்னிட்டு அவர் மனைவியுடன் ரொமன்ஸாக எடுத்த புகைப்படங்களையும், 2 குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் சாண்டியின் மகள் லாலா பாப்பா நன்கு வளர்ந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sandy #daughter #wedding day
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story