தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த குட்டி பிரபலம்.! டீ சர்ட்டை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! ஏன் தெரியுமா?

sandy family entering in bigboss

sandy-family-entering-in-bigboss Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

Sandy

அதன்படி நேற்றைக்கு முதல்நாள் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.அதனை தொடர்ந்து நேற்று தர்சன், வனிதா மற்றும் சேரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் கவினின் நண்பர் வருகை தந்துள்ளார். அவரை தொடர்ந்து சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை லாலா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது. ஆரிரோ ஆரிரோ பாடல் பின்னொளியில் ஒலிக்க குருநாதா டீ சர்ட் அணிந்தபடி தத்தி தத்தி வீட்டிற்குள் நடந்துவந்த குழந்தையை கண்டதும் சாண்டி கதறி அழுதுள்ளார். தற்போது இந்த பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sandy #lala #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story