×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னம்மா இது ! தர்ஷனின் காதலி சனம்ஷெட்டி வெளியிட்ட புகைப்படம்! மண்டை காய்ந்து போன ரசிகர்கள்!

Sanam shetty with tharshan photo viral

Advertisement

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த விளம்பர மாடலான இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தநிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் தனது ராஜ்கமல் ப்ரொடக்ஷன் மூலம் தர்ஷனுக்கு படவாய்ப்பு வழங்குவதாகவும் கமல் வாக்கு அளித்தார். 

மேலும் தர்ஷன் காதலி நடிகை சனம் ஷெட்டி.  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். இந்நிலையில் சமீபத்தில் சனம் ஷெட்டி தர்ஷனுடன் தனது  காதல் முடிவடைந்தது போன்று கோபமாக பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் தர்ஷனுடன் கமலின் 60 வருட திரைப்பயண கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sanam shetty #Tharshan #Love
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story