×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் காதலில் விழுந்தாரா சனம் ஷெட்டி! வைரலாகும் புது காதலரின் புகைப்படம்!! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களுடன் மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றார். 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேறியபோது #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும் உருவானது. சனம் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனை காதலித்ததாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் இருவரும் மாறி மாறி போலீசில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பிடித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன். காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி என புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் அவர் மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாரா? அந்த அதிர்ஷ்டசாலி யார்?என கமெண்டு செய்து வருகின்றனர். மேலும் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sanam #valentines day #new lover
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story