ஒரு படத்திற்குள் இப்படி போஸா! கோமாளி பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
Samyutha hatta

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான "வாட்ச்மேன்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனதால் அவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.
ஆனால் அதன்பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்தில் இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கோமாளி பட வெற்றியை தொடர்ந்து சம்யுக்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. தற்போது காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டனின் உதவி இயக்குனர் இயக்கம் பப்பி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு படத்திற்குள் இப்படி ஒரு போஸா என கிண்டல் செய்து வருகின்றனர்.