×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர்.. கொண்டாட ரெடியாகுங்க.! சமந்தா ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! அட.. என்ன விஷயம் தெரியுமா??

சூப்பர்.. கொண்டாட ரெடியாகுங்க.! சமந்தா ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! என்ன விஷயம் தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் கணவரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் சுற்றுலா, செல்வது படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் சமந்தா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ், யசோதா போன்ற படங்கள் உள்ளன. இவற்றில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது. அதனை தொடர்ந்து சமந்தா, ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இயக்கத்தில் யசோதா என்ற படத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படமாக இதனை ஸ்ரீ தேவி மூவிஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் யசோதா படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Yasodha #release
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story