தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை சமந்தா?? ஏன்? இதுதான் காரணமா!! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை சமந்தா?? ஏன்? இதுதான் காரணமா!! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Samantha taking break from cinema for treatment Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அப்படியும் அவர் அயராமல் யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

samantha

நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அவர் எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகாமல், சினிமாவில் இருந்து சில காலம் தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #treatment #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story