×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. நடிகை சமந்தாவிற்கு அரியவகை தோல் நோயா.! அமெரிக்காவில் சிகிச்சை பெறுகிறாரா! வெளிவந்த உண்மை!!

அடக்கடவுளே.. நடிகை சமந்தாவிற்கு அரியவகை தோல் நோயா.! அமெரிக்காவில் சிகிச்சை பெறுகிறாரா! வெளிவந்த உண்மை!!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் செம பிஸியாக நடித்து வருகிறார்.

அவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற பிரிவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து சமந்தா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது கைவசம் யசோதா, சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன. மேலும் தெலுங்கில் குஷி என்ற படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சை பெறுவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து சமந்தா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது அவரது மேனேஜர் மகேந்திரா என்பவர் கூறியதாவது, சமந்தா தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Skin issue #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story