×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க போகிறாரா சமந்தா.? வீடியோ வைரல்.!

நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க போகிறாரா சமந்தா.? வீடியோ வைரல்.!

Advertisement

2010ம் ஆண்டு "விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட விருதுகள், நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். இதையடுத்து அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சைக்காக நடிப்பிற்கு தற்காலிக முழுக்கு போட்டுள்ளார்.

மேலும் இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த சமந்தா விளம்பர படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் சமந்தாவை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் அதிக எடை கொண்ட பளு தூக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமந்தா சினிமாவில் நடிக்க பிட்டாகி விட்டதாக கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Kollywood #actress #cinema #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story