தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'அது ஜாஸ்தியா இருந்தா அது நிறைய வளருமாம்' - சமந்தாவை அவமானப்படுத்த முயற்சித்த டைரக்டர்.‌.. நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா.!

'அது ஜாஸ்தியா இருந்தா அது நிறைய வளருமாம்' சமந்தாவை அவமானப்படுத்த முயற்சித்த டைரக்டர்.‌.. நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா.!

samantha-hit-back-to-producer-with-a-screen-shot-reply Advertisement

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா  திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவிலும் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் சமந்தா.

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் சில நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில் மீண்டும் சினிமா, ஃபிட்னஸ் என தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.

samantha

இந்நிலையில் இவருக்கு மையோசைட்டிஸ் எனும் நோய் தாக்கியது‌. அந்த நோயின் தீவிர தன்மையிலிருந்து குணமாகி மீண்டும்  தன்னுடைய திரை உலக வாழ்க்கையை தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான சாகுந்தலம் திரைப்படமும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தா குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்‌. அனுதாபத்தின் மூலம் அவர் தனது படங்களை வெற்றி பெற வைக்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சமந்தா தனது ஸ்டார் மதிப்பை பெறுவதற்கு ஓ சொல்றியா மாமா போன்ற கீழ்த்தரமான பாடல்களின் மூலம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது  விமர்சனங்களுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக பதிலடி கொடுத்திருக்கிறார் சமந்தா. காதுகளில் எப்படி முடி வளரும் என்ற தகவலை  கூகுளில் தேடி அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  பகிர்ந்திருக்கிறார் சமந்தா‌. அந்தச் செய்தியில் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் அதிகமாக இருந்தால் காதுகளில் முடி வளரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தகவலை பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் தயாரிப்பாளர் சிட்டி பாபுவின் ஆணாதிக்கத் தனத்தை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக இணையதள வாசிகள் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #actress #Shaakunthalam #director #Chitti babu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story