×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய மனசு! கஷ்டப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்!! வேற லெவல்தான்...

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களுடன் இணைந்

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் சமந்தா சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் அவர் தான் ஏழு சகோதரிகளை பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார். அப்பொழுது பேசிய அவர் தான் ஆட்டோ ஓட்டும் வருமானம் என் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

 அப்பொழுது நடிகை சமந்தா தனது சொந்த செலவில் தான் கார் ஒன்றை வாங்கி தருகிறேன். அதன்மூலம் டிராவல்ஸ் நடத்தி அதிகப்படியான வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கலாம் என தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி  அந்தப் பெண்ணிற்கு கொடுத்துள்ளார். இந்தநிலையில் சமந்தாவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #car #auto driver
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story