×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊ சொல்றியா மாமா... செம கிளாமராக சமந்தா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடல் இதுதான்! வைரலாகும் வீடியோ!!

ஊ சொல்றியா மாமா... செம கிளாமராக சமந்தா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடல் இதுதான்! வைரலாகும் வீடியோ!!

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் அண்மையில் தனது கணவரை விவாகரத்து செய்து பிரியவிருப்பதாக அறிவித்தார். சமந்தா தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சமந்தா சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் உள்ளார்.

ஐட்டம் பாடலான இதனை தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா.. என தொடங்கும் இந்த பாடலில் சமந்தா செம கிளாமராக நடனமாடியுள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒன்றரை கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Pushpa
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story