53 வயதில் நடிகர் சல்மான்கானிற்கு இப்படியொரு ஆசையா? ஷாக் ஆன திரையுலக வட்டாரங்கள்!!
salman khan wish to get baby by rent mother
பாலிவுட்டில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சல்மான் கான். இவருக்கென பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் ஹிந்தி சினிமாவின் வசூல் மன்னராகவும், பாலிவுட்டின் கிங் கான் என்றும் அழைக்கப்படும் நடிகர் சல்மான்கான் பல நடிகைகளை காதலிக்கிறார் என அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பியது. ஆனாலும் அவர் 53 வயதாகியும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தனது சகோதரர் மற்றும் சகோதரியின் குழந்தைகள் மீது பெரும்அன்பு வைத்து, அவர்களிடம் நெருக்கமாக இருந்த சல்மான்கானிற்கு தற்பொழுது தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
அதனை தொடர்ந்து அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதற்கு உரிய வாடகை தாய்மார்களை அவர் தேடி வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது.