×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சும்மாவே வேற லெவல்! அதுல இவரும் நடிக்கிறாரா! பிரம்மாண்டத்தின் உச்சியில் பிரமிக்க வைக்கும் இயக்குனர் ஷங்கர்!!

தமிழ் சினிமாவில் தனது பிரமாண்ட படைப்புகளின் மூலம் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர

Advertisement

தமிழ் சினிமாவில் தனது பிரமாண்ட படைப்புகளின் மூலம் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். கொரோனா பரவல் காரணமாகவும், கமல் அரசியலில் பிஸியாக இருந்ததாலும்  இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தகவல்கள் பரவியது. மேலும் இப்படத்தில் ராம்சரண் தந்தையாகிய சிரஞ்சீவியும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தினை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற 5 மொழிகளில் இயக்க உள்ளதால் அந்தந்த மொழி பிரபலங்களையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shankar #Salman khan #Ram charan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story