தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிக்சனுடன் ஒரே ரொமான்ஸ்.! பிக்பாஸில் 42 நாட்களுக்கு ஐஷூ வாங்கிய சம்பளம் எவ்வளவுனு பார்த்தீங்களா!!

நிக்சனுடன் ஒரே ரொமான்ஸ்.! பிக்பாஸில் 42 நாட்களுக்கு ஐஷூ வாங்கிய சம்பளம் எவ்வளவுனு பார்த்தீங்களா!!

Salary for aayshu to participate in bigboss Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்குகளால் சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளனர்.

மேலும் பாவா செல்லத்துரை தானாக வீட்டை விட்டு வெளியேறினார். பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஐஷூ எலிமினேட்டாகியுள்ளார். ஆரம்பத்தில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து ரசிகர்களை கவர்ந்த ஐஷு நாளடைவில் நிக்ஷனுடன் நெருங்கி பழகி வந்தார்.

Aayshu

கண்ணாடி முன் நின்று முத்தம் கொடுப்பது,  இரட்டை அர்த்தங்களில் பேசுவது, ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்தார். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறிய ஐஷூவின் சம்பளம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஜிஎஸ்டி போக சுமார் 8 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு ரசிகர்கள் ரொமான்ஸ் செய்ததற்கு 8 லட்சம் சம்பளமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aayshu #salary #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story