×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சலார் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? வெளியான தகவல்!

சலார் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? வெளியான தகவல்!

Advertisement

கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். இவர் யஷை வைத்து இயக்கிய கே ஜி எஃப் 1 மற்றும் 2ம் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்திய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. அதன்படி இந்த திரைப்படம் மொத்தமாக ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக முதல் பாகத்திற்கு சுமாரான வரவேற்பு பெற்றதால், இரண்டாம் பாகம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 இந்த நிலையில் சலார் 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் இருந்த குறைகளை சரி செய்யும் வகையில் இயக்குனர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salar #Salar 2 #kgf #Prashant Neel #Prabhas
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story