×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடா! அஜித்தை பற்றி இந்த பிரபல நடிகை என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!! புகைப்படத்துடன் வைரலாகும் பதிவு!!

sakshi wiish ajith character

Advertisement

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

மேலும் பல நடிகர்கள் அரசியல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இவர்  விளையாட்டு,அறிவியல் என தனது பார்வையை வித்தியாசமான முறையில் செலுத்தி வருகிறார்.இதனால் இளைஞர்கள் அனைவருக்கும் இவர் மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளார்.

இந்நிலையில் மகள் மற்றும் தந்தைக்கிடையேயுள்ள அன்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் விசுவாசம். இதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் சாக்ஷி நடித்துள்ளார். இந்நிலையில் அப்பொழுது அஜித் உடன் சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிக துணிச்சலான மனிதன்.  மிகவும் நேர்மையானவர். தனது தொழிலில் ஆர்வம் காட்டுபவர். மேலும் அனைத்து பெண்களிடமும் தாழ்ந்து மரியாதை கொடுக்க கூடியவர் என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi #Ajith
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story