தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படமாகிறது படையப்பா நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை! கதாநாயகியாக நடிக்கப்போவது இவரா? தீயாய் பரவும் தகவல்!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

saipallavi-act-in-actress-sowndarya-biopic Advertisement

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், சத்யராஜ். அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான  ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

மேலும் இவர் ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
சௌந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக, பிரசாரம் செய்ய சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது அந்த மரணம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

saipallavi

இந்நிலையில் சமீபகாலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும்   சினிமாவாக தயாராகிவரும் நிலையில்,  தற்போது நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையும் படமாகவுள்ளது. இதில் சௌந்தர்யாவாக நடிக்க நடிகை சாய் பல்லவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#saipallavi #sowndarya #Biopic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story