இது அரசியல் நிகழ்ச்சி போல இருக்கு! தனுஷ் ப்ரோ அரசியலுக்கு போங்க..... ஆனால் விஜய் சார் மாதிரி பண்ணிடாதீங்க! தனுஷுடம் சாய் பல்லவி சொன்ன அந்த ஒரு வார்த்தை... வைரல் வீடியோ..!!!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் நடிப்பைக் கைவிடக் கூடாது என நடிகை சாய் பல்லவி திரைப்பட விழாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பேச்சு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி பங்கேற்ற திரைப்பட விழாவில் சாய் பல்லவி பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் நடிப்பைத் தொடர வேண்டும் என்று அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார். தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பிலிருந்து விலகியிருப்பதையும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
திரைப்பட விழா அரசியல் நிகழ்ச்சி போல உள்ளது
திரைப்பட விழாவில் பேசிய சாய் பல்லவி, தற்போதைய சூழலில் இந்த விழாவே ஒரு அரசியல் நிகழ்ச்சி போல இருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து அரங்கில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: BREKAING: தேவா மறைந்த சோகமே இன்னும் மறையல.. அடுத்து அண்ணன் மகன் அகால மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!!
தனுஷுக்கு சாய் பல்லவி வைத்த வேண்டுகோள்
தொடர்ந்து நடிகர் தனுஷ் குறித்து பேசிய அவர், தனது வாழ்க்கையில் தனுஷ் எந்தப் பெரிய முடிவை எடுத்தாலும் அது வெற்றிபெற மனதார வாழ்த்துவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், அவர் நடிப்பையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது நடிப்பிலிருந்து விலகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய சாய் பல்லவி, தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் திரையுலகை விட்டுவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். ரசிகர்களை மகிழ்விக்கும் சிறந்த கலைஞர்களின் நடிப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இணையத்தில் வைரலாகும் பேச்சு
தனுஷின் எதிர்கால முடிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் நடிப்பைத் தொடர வேண்டும் என சாய் பல்லவி வெளிப்படையாகக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்பட விழாவில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா...! ஒரே நாளிலே 4.4 கோடி வியூஸ்... ஷாருக்கான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய குட்டி சிறுமி! இணையத்தை கலக்கும் வீடியோ...!!!