தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாய் பல்லவி இவ்வளவு குறும்புதனம் வாய்ந்தவரா? பிறந்தநாள் பரிசாக தங்கை பூஜாவின் செம்ம சர்ப்ரைஸ்! இணையத்தில் வைரலாகும் காணொளி!

சாய் பல்லவி இவ்வளவு குறும்தன்மை வாய்ந்தவரா? பிறந்தநாள் பரிசாக தங்கை பூஜாவின் செம்ம சர்ப்ரைஸ்! இணையத்தில் வைரலாகும் காணொளி!

sai-pallavi-birthday-surprise-video-by-sister Advertisement

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மனதை கவர்ந்துவைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. தன்னுடைய இயற்கையான நடிப்பும், மென்மையான நடனத்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார். கோயம்பத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட சாய் பல்லவி, 2008ஆம் ஆண்டு பிரபல டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியின் மூலம் முதன் முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் வெளியாகிய “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக அறிமுகமானவர் சாய் பல்லவி. அதன் பிறகு தமிழில், தெலுங்கில் என பல வெற்றிப்படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்சிகளைத் தவிர்த்து, பாரம்பரிய கொண்டு நடிப்பில் மெருகூட்டும் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தனித்த அடையாளம் உருவாக்கியுள்ளார்.

பிறந்த நாள் விழா – தங்கையின் சார்பில் இனிய காணொளி

சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். சமுத்திரக்கனியுடன் “சித்திரை செவ்வானம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்த பூஜா, அதன் பிறகு திரைதுறையில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இதையும் படிங்க: அட.. இது வித்தியாசமா இருக்கே.! ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்னனு பார்த்தீங்களா!!

சாய் பல்லவியின் பிறந்த நாளையொட்டி, தன் அக்காவுடன் பகிர்ந்த மனதுக்கு நெருக்கமான தருணங்களை காணொளியாக தொகுத்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் பூஜா. அந்த காணொளி மிக விரைவாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் “சாய் பல்லவி இவ்வளவு குறும்தன்மை வாய்ந்தவரா?” எனக் கருத்து பதிவிடுவதுடன், அக்கா–தங்கை உறவுக்குள் உள்ள அன்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என்ன சொல்றீங்க!! கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sai Pallavi birthday #Vital video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story