×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம மாஸ் காட்டும் ஆர்ஆர்ஆர்.! மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா! கொண்டாடும் ரசிகர்கள்!!

செம மாஸ் காட்டும் ஆர்ஆர்ஆர்.! மூன்று நாளில் இவ்வளவு வசூலா! கொண்டாடும் ரசிகர்கள்!!

Advertisement

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் பெருமளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஆர்ஆர்ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது.

ஆர்ஆர்ஆர் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அப்படத்தில் தேஜா, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளியானது.

மேலும் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி முதல் நாளிலேயே 240 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து படம் வெளியாகி மூன்றே நாட்களில் ரூ.500 கோடி ரூபாயை வசூலித்ததாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#RRR #Collection #Blockbuster
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story