எக்ஸ்பிரஸ்ஷன் எப்படியெல்லாம் இருக்கு! தக் லைஃப் முத்த மழை பாடலுக்கு ரோபோ ஷங்கர் மகள் செய்த ரீல்ஸ்! ட்ரெண்டிங் வீடியோ...
என்னாம்மா எக்ஸ்பிரஸ்ஷன் கொடுக்குறாங்க! தக் லைஃப் முத்த மழை பாடலுக்கு ரோபோ ஷங்கர் மகள் செய்த ரீல்ஸ்! செம ட்ரெண்டிங் வீடியோ...
ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலகலப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் அறிமுகமானார். அதன் பின், வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நடிப்புலகில் இந்திரஜாவின் பயணம்
ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா, பிகில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். சில வருடங்களுக்கு பிறகு, தனது முறைமாமனை திருமணம் செய்து கொண்டார்.
மகனுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி
இந்திரஜா சமீபத்தில் மகனுக்கு தாயாக மாறியுள்ளார். மகிழ்ச்சியான இந்த தருணங்களை அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இறுதிவரை எத்தனை முறை சொல்லியும் முடியாத்துனு சொல்லிட்டாங்க! நயன்தாரா குறித்து ஓப்பனாக பேசிய யோகி பாபு!
தக் லைஃப் பாடலுக்கு முகபாவனை வீடியோ
தற்போது இந்திரஜா தக் லைஃஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை என்ற பாடலுக்கு தனது முகபாவனைகளுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை உருவாக்கி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் விஜயாவிடம் கையும்களவுமாக சிக்கிய ரோகிணி! விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்.! இனி நடக்க போவது என்ன? சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...