தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென்று கமல்ஹாசன் சந்தித்த ரோபோ சங்கர்.. என்ன காரணம்.?

திடீரென்று கமல்ஹாசன் சந்தித்த ரோபோ சங்கர்.. என்ன காரணம்.?

Robo sanker meet kamal hasan Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். இதையடுத்து இவர் தமிழில் சில படங்களில் துணை நடிகராகவும், காமெடி ரோலிலும் நடித்து வருகிறார். இவரது மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

kamal

இந்நிலையில், திடீரெனெ உடல் இளைத்த நிலையில் ரோபோ ஷங்கரின் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனைவரும் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய நிலையில், அவரது மனைவி, ஒரு படத்திற்காக எடை குறைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு ரோபோ ஷங்கர், மஞ்சள் காமாலை நோயினால் தான் தனக்கு இந்த நிலை என்று கூறியிருந்தார். அப்போது நடிகர் கமலஹாசன் தொலைபேசி மூலம் ரோபோ ஷங்கரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

தற்போது உடல்நலம் தேறி வரும் நிலையில், ரோபோ ஷங்கர்  தனது மனைவி, மகளுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்திற்குச் சென்று, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #robo #Kollywood #actor #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story