×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. என்ன இப்படி சொல்லிட்டாரே.. விஜய் டிவியை ஓப்பனாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி.! அதுவும் சரிதானே!!

அட.. என்ன இப்படி சொல்லிட்டாரே.. விஜய் டிவியை ஓப்பனாக கலாய்த்த ஆர் ஜே பாலாஜி.! அதுவும் சரிதானே!!

Advertisement

தொகுப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் உள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் அவர் கொடுக்கும் கமெண்ட்ரியை கேட்கவே ரசிகர்கள் உள்ளனர். RJ பாலாஜி சினிமாவில் எல்கேஜி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தனது நகைச்சுவையான பேச்சால், நடிப்பால் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து அவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க போன்ற படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ரன் பேபி ரன். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் ரன் பேபி ரன் திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதனை அறிவிக்கும் வகையில் ஆர்.ஜே பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 

அதில் அவர், தனது படங்கள் வெளியாகும் போது ஸ்டார் விஜய், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரே வாங்க வேண்டும் என கடவுளை வேண்டுவேன். அப்பொழுதுதான் கும்கி, ராஜாராணி, சிறுத்தை, துப்பாக்கி போன்று தனது படங்களையும் பலமுறை போடுவார்கள் எனவும், இனி 10 வருடங்கள் 2023 வரை திரும்பத் திரும்ப ரன் பேபி ரன் படத்தை போடுவார்கள் என ஜாலியாக கலாய்த்து கூறியுள்ளார்.

மேலும் அதில் அவர், ரன் பேபி ரன் படத்தை ஏழு முறை பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் இனி ஆயிரம் முறை பார்க்கலாம் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#RJ balaji #Run baby run #vijay tv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story