×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்யாணத்தை முடித்த கையோடு, மனைவியோடு ஜோடியாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி எங்கு சென்றுள்ளார் தெரியுமா?? வைரலாகும் சூப்பர் கிளிக்ஸ்!!

கல்யாணத்தை முடித்த கையோடு, மனைவியோடு ஜோடியாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி எங்கு சென்றுள்ளார் தெரியுமா?? வைரலாகும் சூப்பர் கிளிக்ஸ்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல வளர்த்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் இயக்கத்தில் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் பெருமளவில் பிரபலமானார். 

அவர் சில தினங்களுக்கு முன் சீரியல்  நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதா விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறினர். திருமணமான ஒரு வாரத்தில் இருவரும் தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Redin kingsly #Sangeetha #Honeymoon
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story