×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"துருவ நட்சத்திரம் வெளியாவதில் மீண்டும் தாமதம்!" என்ன காரணம்..

துருவ நட்சத்திரம் வெளியாவதில் மீண்டும் தாமதம்! என்ன காரணம்..

Advertisement

இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்டவராகத் திகழ்பவர் கெளதம் மேனன். இவர் 2001ம் ஆண்டு "மின்னலே" திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவரே இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, புத்தம் புது காலை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், விக்ரம், ரிது வர்மா ஆகியோரை வைத்து கெளதம் மேனன் இயக்கியுள்ள "துருவ நட்சத்திரம்" திரைப்படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று வரை படத்தை பற்றிய பதிவுகளை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு வந்தது.

ஆனால் இன்னும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. மேலும் இன்று எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே நாளை "துருவ நட்சத்திரம்" வெளியாகாது என்று தகவல் பரவி வருகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #cinema #actor #latest #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story