×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பல வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத அஜித்!" காரணம் சொன்ன பிரபல பத்திரிகையாளர்!

பல வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத அஜித்! காரணம் சொன்ன பிரபல பத்திரிகையாளர்!

Advertisement

காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், வில்லன், பூவெல்லாம் உன் வாசம், கிரீடம், பில்லா, அட்டகாசம், மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நாயகனாக இருப்பவர் அஜித்குமார்.

இதுவரை 61 படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக "துணிவு" படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வசூலையும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" படத்தில் நடித்துக்கொண்டுள்ளார் அஜித்.

இந்நிலையில் அஜித் எப்போதும் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலோ, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையோ தவிர்த்து வருகிறார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் வி.கே சுந்தர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், "அமராவதி படத்தில் இருந்தே எனக்கு அஜித்தை தெரியும்.

அவரும் ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் வந்தார். அவரது ஆபிஸிற்கு வர சொல்லி பேசுவார். நண்பர்களோடு அமர்ந்து ஜாலியாக பேசுவது போல் தான் அவருடனான சந்திப்பு இருக்கும். ஆனால் ஒருகட்டத்தில் தேவையில்லாத கேள்விகள் எல்லாம் கேட்கபட்டதை அஜித் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #Kollywood #cinema #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story