ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு இப்படியொரு பெருமையா? புகழ்ந்து தள்ளியது யாரு, எந்த நாடுனு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!
ratssi movie greated by malaysia education minister
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நடிகை ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். மேலும் அப்படத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் செல்போன் பார்ப்பது , கதைபுத்தங்கள் படிப்பது போன்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்பது போன்ற சில வசனங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில் படம் பெருமளவில் பிரபலமானது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டி தள்ளியுள்ளார். மேலும் அவர் நான் இந்த படத்தை எனது அதிகாரிகளோடு பார்த்தேன். கல்வி அமைச்சராக இந்தப் படத்தை பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாகஇருந்தது. தலைமையாசிரியராக நடித்த கீதா ராணி சூப்பர்கேரக்டர்.
அப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும் நாட்டில் தற்போதைய சூழலுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது. . நாம் செய்யவேண்டிய திட்டங்களும், மாற்றங்களும் குறித்து இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.