தமிழ்நாட்டு மருமகளாகணும்.. ஏன் தெரியுமா? முதல் முறையாக தனது திருமண ஆசையை போட்டுடைத்த நடிகை ராஷ்மிகா!!
கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா
கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கு மட்டுமின்றி பல மொழி ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த அவருக்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படம் வெளியானதை தொடர்ந்து ராஷ்மிகா தமிழிலும் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார். மேலும் சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர் திருமணம் குறித்து கூறுகையில், தமிழ் கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதிலும் இங்குள்ள உணவுகள் மிகவும் அருமையாக உள்ளது. அறுசுவையாக உள்ளது. எனவே ஒரு தமிழரை திருமணம் செய்துகொண்டு தமிழ் குடும்பத்தின் மருமகளாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.